January 18, 2022

தமிழக அரசியலில், 20-20, ஆட்டம் ஆரம்பம்…

1 min read
Spread the love

உலகமே.. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தற்போது தான், சிறிது, சிறிதாக விடுபட்டு கொண்டு உள்ளது. பல நாடுகள் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டும் உள்ளன. அந்த வகையில் தான் தமிழகமும் அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி செயல்பட துவங்கியுள்ளது.

அதிலும், தமிழக கட்சிகள் ஒன்றை, ஒன்று முண்டியடித்து கொண்டு அவசரகதில், ஓடி கொண்டு உள்ளன. வேகமாக ஓடி கொண்டு இருக்கும் கட்சிகள் கூட, நாம் வெற்றி பெறுவோமா.. என்ற பீதியிலேயே மேலும் வேகம் எடுத்து ஓடுகின்றனர், அதற்க்கு காரணம், இன்னும் ஓடவே துவங்காத ஒரு தனி நபரை பார்த்து தான், ஆமாம், வரபோகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று வரை கட்சி துவக்காமல் , ஒரு கூட்டம் கூட போடாமல், நாம் வெற்றி பெறுவோம்.. என்று மட்டும் கூறி கொண்டு இருக்கும் ரஜினியை நினைத்து தான், இவர்கள் அலறி கொண்டு இருக்கிறார்கள். இந்த அலறல் இன்று நேற்று அல்ல, ரஜினி கடந்த 2017ம் ஆண்டில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என கூறியதில் இருந்தே துவங்கிவிட்டது.

அன்று துவங்கிய இந்த அலறல், நாளுக்கு நாள் கூடி கொண்டே உள்ளது. அதிலும் ஒருவர் சிலர் மட்டும் கதறு, கதறு என கதறுகிறார்கள் இன்னும் சிலர் அலறவும் முடியாமல், உள்ளுக்குள்ளேயே குமுறுகின்றனர். சிலர் அலறவும் முடியாமல், கதறவும் முடியாமல், குமுறவும் முடியாமல், கருகி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அடிவயிற்றில் கருகுவது வாசனையாக தான் வெளியில் மற்றவர்கள் உணர முடிகிறது.

இப்படிபட்ட சூழ்நிலையில், ரஜினி சில மாதங்களுக்கு ஒரு முறை சிறிது நகர முயலும் போதெல்லாம், சிலர் பூகம்பம் வந்ததை போல் அதிர்வை உணர்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம், தான் அரசியல் கட்சி துவங்குவது குறித்து, டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாக அறிவித்து மேலும் இரண்டு நிர்வாகிகளையும் நமக்கு அறிமுகபடுத்தினார். அதில் இருந்து, 20-20 மேட்ச் சூடு பிடித்துவிட்டது. உடனே, அவரை எதிர் நோக்கி உள்ள கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் நிற்காத குறையாக, பல தரக்குறைவான எதிர் தாக்குதலை துவங்கிவிட்டார்கள். ரஜினி இவர்கள் கூப்படுகளை எல்லாம் காதில் கேட்பது கூட கிடையாது. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிப்பது தான் தனது வேலை என்னும் விதமாக, அவர் வேலையை துவங்கிவிட்டார்.
அதனால், தமிழகத்தில் ஆட்டகளம் சூடுபிடித்துவிட்டதை மக்கள் உணர்கிறார்கள்.

அதில் குறிப்பாக, ரஜினி அவர்களால் பெரும் பாதிப்பிற்கு ஆளாக உள்ள, அதிமுக தரப்பில் நடுக்கங்களை நாம் வெளிப்படையாக பல விதங்களில் நாம் உணர முடிகிறது. அதில் முதலாவது, தமிழக துணை முதல்வர் ரஜினிக்கு வாழ்த்து சொன்ன உடன், முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் நடுக்கத்துடன் அலறிய அலறல் இருக்கே.. அந்த அலறல் இந்த உலகிற்க்கே கேட்டது. அந்த அதிர்வின் வெளிப்பாடு தான், வருகின்ற 14ம் தேதி அதிமுக கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பது.

ஆளும் கட்சி தரப்பில் இந்த நிலை என்றால், எதிர் கட்சி தரப்பில், அலறல் சத்தம் வேறு விதமாக உள்ளது. இங்கு அவர்கள் தரப்பில் அலறுவது இல்லை, இவர்கள் எதை கண்டும் நாங்கள் அலறமாட்டோம், என்னும் பாணியில், எங்கோ கவனத்தை வைத்து இருப்பதை போல் திரும்பி நின்று கொண்டு, கூட நின்று இருப்பவர்களை வைத்து திட்டவிடுவது. இதில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதை அடங்கியுள்ளது. ஒன்று நமது சார்பாக ஒருவர் திட்டிவிட்டார் என்பது, மற்றொன்று திட்டிய நபர் நம்மைவிட்டு அந்த தரப்பிற்க்கு தாவிவிடமாட்டார் என்பது, அதனால் அவர்கள் தரப்பிற்க்கு ஒரு மன ஆறுதல், அவ்வளவு தான்.

ரஜினியின் அரசியல் பாதையை கணிக்க ஒரு தகுதி வேண்டும், அதை எதிர்கட்சி தரப்பு கணித்துவிட்டது. அதனால் அமைதி காத்து நாம் இவருடன் தான் ஆட வேண்டிய நிலைவரும் என்பதை உணர்ந்து ஆட்டத்திற்க்கு தயார் ஆகிவிட்டார்கள். ஆனால் இவரை எதிர்த்து விளையாட தகுதி இல்லாத நபர்கள் தான், அவருக்கு விளையாட தெரியாது அவருடன் எப்படி விளையாடுவது, அவர் அழுகினி ஆட்டம் ஆடுவார் அவருடன் எப்படி விளையாடுவது, ஆவருக்கு ஏற்றார் போல் ஆடுகளத்தை அவர் ஆள்வைத்து தயார்படுத்தி இருக்கிறார், நடுவர் அவருக்கு சாதமாக தான் தீர்ப்பு சொல்லுவார், இப்படி பல நொண்டி கதை பேசி கொண்டுள்ளனர்.

எது எப்படியோ, பலவிதமான எதிர்ப்புகளை எல்லம் கடந்து பலவிதமான விளையாட்டுகளையும் விளையாடி பல வெற்றிகளை பெற்ற, ரஜினி அவர்கள் சுயம்புவாக உருவாகி, வளர்ந்து உச்சத்தில் நிற்க்கும், அவர் தான் இந்த அரசியல் ஆடுகளத்தையும் வென்றெடுப்பார் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்…

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *