அம்பத்தூரில், தனிஷ்க் நகைகடையின், 100வது கிளை துவக்கப்பட்டது.
1 min read
இந்தியாவிலேயே, நம்பகமான நகைகடையான தனிஷ்க் நகைகடை நிறுவனம் தனது 100வது கிளையை அம்பத்தூரில் துவக்கி உள்ளது. மிகவும் பிரமாண்டமான அந்த நகைகடை 2500 சதுர அடி பரப்பளவில், எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கபட்டுள்ளது.

இந்த புதிய கிளையை, டைட்டன் கம்பேனி லிமிடெட், சில்லறை விற்பனை பிரிவின் பிரிவின் தலைமை நிர்வாகி, விஜேஷ்ராஜன் மற்றும் டைட்டன் தனிஷ்கின் தெற்கு பிரிவு வணிக தலைவர் நரசிம்மன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிறுவனம், திறப்பு விழாவின் சிறப்பு சலுகையாக இங்கு நகைகள் வாங்குபவர்களுக்கு, ஒரு இலவச தங்க நாணயங்களை வழங்குவதுடன், இந்த பிராண்ட் தங்க நகைகளின் செய்கூலி , வைர நகைகளின் மதிப்பில் 25% தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்த புதிய கிளையை திறந்து வைத்த, டைட்டன் கம்பேனி லிமிடெட், சில்லறை விற்பனை பிரிவின் தலைமை நிர்வாகி, விஜேஷ்ராஜன் பேசுகையில், எங்கள் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவின் 100 கிளையை இந்த அம்பத்தூரில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் நிறுவனம் செயல்படும் இடங்களில் எல்லாம், சில்லறை விற்பனையில் மக்களிடம் நம்பிக்கையையும், நல்ல மதிப்பையும் நாங்கள் பெற்று இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் அவர்கள் வீடுகளில் இருந்தே நகை வாங்கும் வசதியையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம், என்று கூறினார்.

செய்தியாளர் – ஆவடி ஜான்
நிழல்.இன் – 8939476777