ஆவடியில், விவசாயிகளுக்கு எதிரான, வேளாண்மை சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
1 min read
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்மை சட்டத்தில் விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ளதாக கூறி வடமாநில விவசாயிகள் லட்சக்கணக்கில் டெல்லியில் திரண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சியின் சார்பில், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, ஆவடி பேருந்து நிலையம் அருகே, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டம், சி.பி.ஐ.எம் மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன் தலையிலும், திமுக திருவள்ளுர் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் ச.மு.நாசர் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், விடுதலை சிறுத்தை கட்சி ஆவடி தொகுதி செயலாளர் ஆதவன், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் முல்லை தமிழன், மதிமுக மாநில தேர்தல் குழு செயலாளர் அந்திரி தாஸ், ஆவடி மாநகர செயலாளர் சூரியகுமார், சி.பி.ஐ.எம் ஆவடி பகுதி செயலாளர் ராஜன் ஆகியோருடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, திமுகவின் திருவள்ளுர் தெற்கு மாவட்ட செயலாளர், ஆவடி ச.மு.நாசர் கண்டன உரையாற்றுகையில், மத்திய அரசு வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். தவறினால் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று பேசினார்.

செய்திகள் – ஆவடி, ஜான்
நிழல்.இன் – 8939476777