எல்லாபுரம் ஒன்றிய அமமுக சார்பில்,
டிடிவி தினகரன் பிறந்த நாள் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…
1 min read

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகமும், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்ராஜ் கலந்து கொண்டார். பின்னர் தாராட்சி பகுதியில் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராள்ளபாடி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள 100 முதியவர்களுக்கு
மாவட்ட சிறுபான்மை செயலாளர் மன்சூர் அலி ஏற்பாட்டில் அன்னதானத்தை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழங்கினார். இதில் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீ குணவர்தன, ஒன்றிய அவைத் தலைவர் கருணாநிதி, ஆரணி நகர செயலாளர் தன்ராஜ், கிருஷ்ணன், சரவணன், ரங்கராஜ், கருணாகரன், மாவட்ட இணைச் செயலாளர் ஸ்டீபன் மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி பெரியபாளையம் ஊராட்சி கழக செயலாளர் சிக்கன் பாஸ்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777