திருவள்ளுர் மாவட்டத்தில், ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்…
1 min read
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டம் சில தினங்களாக தொடர்ந்து கொண்டாடபட்டு வருகிறது. அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பாக ரத்ததான முகாம், இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள், மற்றும் மசூதிகளில் தொழுகைகள், அண்ணதானங்களுடன், கேக் வெட்டி இனிப்பு வழங்கி தடபுடலான ஏற்ப்பாடுகளுடன் 11 ம் தேதி இரவு முதல் தொடர்ந்து இரண்டு, மூன்று தினங்களாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டியில், உள்ள அகத்தீஸ்வரர் ஆலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் இனிப்புகளும், அண்ணதானமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு, அண்ணதானங்களையும் வழங்கினார். இந் நிகழ்ச்சிகளை சோழவரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய விவசாயி அணி செயலாளர் இ.ரவி, ஊராட்சி செயலாளர் வி.வி.ரவி ஆகியோர் செய்து இருந்தனர்.

கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக, ரஜினிகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, கடம்பத்தூர் ஒன்றியம் இறையமங்கலமயா மங்கலம்ஸ்ரீ ராகவேந்திரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், தேர் இழுத்தல் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருநின்றவூர் பேரூராட்சி ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில், ரஜினிகாந்த் அவர்களின் 71வது பிறந்தநாள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், திருநின்றவூர் நிர்வாகிகள் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாமை நகர செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் பீரோ குமார் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சி.சேகர், முனிவேல், சோழவரம் அன்சாரி மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள், திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக, மக்கள் மன்றத்தின் மகளிர்கள் பலரும் அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிழல்.இன் – 8939476777