April 22, 2021

கும்முடிபூண்டியில், நலிந்த மூத்த திமுக குடும்பத்தினருக்கு 80 லட்சம் ரூபாய் நிதியை, டி.ஜெ.எஸ் அறிவிப்பு

1 min read

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி கிழக்கு மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி நகரம் உள்ளடங்கிய திமுக பொது உறுப்பினர் செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. கும்முடிபூண்டியில்கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மு.பாஸ்கரன் வரவேற்றார். கும்முடிபூண்டியில்
கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார்,
மணிமேகலை சுகு, ராமஜெயம், அவைதலைவர் வேதாச்சலம், ஸ்ரீதர், கிழக்கு ஒன்றிய துணைசெயலாளர்கள் மஸ்தான், ஏசுமுத்து, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, பரத்குமார், நிர்மலா பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர் கெளரி ஹரிதாஸ், ஜோதி, அமலா
சரவணன், கீழ் முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, வழக்கறிஞர் வெங்கடாசலபதி, எம்.எல்.ரவி, பகலவன், சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்கள். தொடர்ந்து கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வேளாண் சட்டங்களை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர், வாக்காளர் பட்டியலில் ஆளும் கட்சியின் தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில் பாக முகவர்கள்
வாக்காளர் பட்டியலை முந்தைய பட்டியலோடு ஒப்பிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்கள், சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் உண்மை தன்மையை ஒப்பிடுவதோடு, தமிழக எல்லையில் உள்ள ஆந்திர பகுதி மக்கள் தமிழக தேர்தலில் தொடர்ந்து வாக்களிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பில், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ஏழ்மை நிலைமையிலும், கட்சிக்கு உழைத்த மூத்த உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர், அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில், 300குடும்பத்தினருக்கு தலா 10ஆயிரம் என 30 லட்சம் ரூபாயும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் 800 குடும்பங்களுக்கு தலா 10ஆயிரம் வீதம் 80லட்சம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்பட உள்ளது என்றார். கூட்ட முடிவில் நகர செயலாளர் அறிவழகன் நன்றியுரை கூறினார். முன்னதாக மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து 500க்கும் மேற்பட்ட திமுகவினருடன் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஊர்வலமாக சென்று கூட்ட அரங்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *