திருவள்ளுர் அரசு மருத்துவமனையின், சுகாதார சீர்கேட்டால் நோய்கள் பரவும் அபாயம்…
1 min read
திருவள்ளுர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து, அந்தப் குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் செல்லும் பாதையில் பல இடங்களில் குட்டைகள் போல் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அந்த மருத்துவமனையில் தங்கி இருக்கும் உள்ளிருப்பு நோயாளிகள் புதிய நோய் தொற்றால் பாதிக்கபட்டு விடுவார்களோ, என மக்கள் அஞ்சுகின்றனர்.

கழிவு நீர் செல்லும் குழாய் உடைந்து பொதுமக்கள் செல்லும் பாதையில் ஆறு போல் கழிவு நீர் ஓடுவதால், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற நோயாளிகளுக்கும் நோய்த் தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாக நோயாளிகள் பலர் கூறினார்கள்.

இம் மருத்துவமனைக்கு வருவார்கள் இங்கு புதிதாக நோய் தொற்றுடன் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவலநிலை உருவாகி உள்ளது. என்று கூறுகிறார்கள். இதனை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா அவர்கள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் நோயாளிகள் தரப்பில் கூறுகின்றனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777
