April 21, 2021

பள்ளிப்பட்டு ஒன்றியம், வெளிகரம் ஊராட்சியில், மூதாட்டிக்கு, இரண்டு வருடமாக ஊதியம் வழங்காத கொடுமை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் அடங்கிய வெளிகரம் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னப்பன், அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். அவருடைய மனைவி ஆஞ்சியம்மாள் என்ற மூதாட்டி தனக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், தன் கணவரும் இறந்து போனதால், வாழ்வாதாரம் இல்லாமல் இருந்த அந்த மூதாட்டி, வயிற்று பிழைப்பிற்காக, அதே ஊராட்சியில் நடந்து வரும் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வேலைக்கான கூலியை அந்த மூதாட்டிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கபடவில்லை எனவும், அதற்கான காரணத்தை சரிவர யாரும் கூறாததால், விரத்தியின் விழிம்பில் கண்ணீருடன் மூதாட்டி போவோர், வருவோரிடம் எல்லம் கூறி புலம்பி வந்துள்ளார். இது குறித்து, மக்கள் தேசம் கட்சின் ஒன்றிய நிர்வாகிகள் வினோ மற்றும் தமிழரசன் இவர்கள் மூலமாக, மக்கள் தேசம் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜிடம் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அவர்கள் மூலமாக, ஒரு கருணை மனுவையும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மனுவை அனுப்பப்பட்டது.

இது குறித்து, நாம் அந்த ஊராட்சி தலைவரிடம் விசாரித்த போது, நீங்கள் சொல்லும் அந்த பாட்டி யார் என்று எனக்கு தெரியவில்லை எனவும், அதுபோல் யாரும் எங்களிடம், புகார் எதும் சொல்லவும் இல்லை, என கூறினார். அதேபோல், பள்ளிபட்டு கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு அவர்களிடம் நாம் கேட்ட போது, இது குறித்து எனது கவனத்திற்க்கு யாரும் கொண்டுவரவில்லை. இதை நான் உடனடியாக விசாரித்து அந்த பாட்டிக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்கிறேன், என உறுதியளித்தார்.
அந்த வயாதான மூதாட்டிக்கு ஊராட்சி நிர்வகத்திடம் இருந்து சரியான பதில் கிடைக்காவிட்டாலும், வட்டார வளர்ச்சி அலுவலரின் பதில் சிறிது ஆறுதலாக இருந்தது.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *