January 25, 2021

இந்தியாவில் கட்டிடக்கலை துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக, மத்திய கட்டிடக்கலை கவுன்சில் உறுப்பினர் ராணி மரியா லியோனி வேடமுத்து தகவல்…

1 min read

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை துறைக்கான நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைவர் ஹாபியூனிசா சாஹிப் தலைமையில் நடைபெற்றது. அதில், பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் பங்கேற்ற 6 மாணவர்கள் உள்பட 58 பேருக்கு டெல்லி கட்டிடக்கலை கவுன்சில் உறுப்பினர் ராணி மரியா லியோனி வேடமுத்து பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

பின்னர் மேடையில் பேசுகையில், இந்தியாவில் கட்டிடக்கலை துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு உலக தரத்தில் கட்டிட கலையில் முன்னேற்றங்களை செய்ய வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

செய்திகள் – ஆவடி ஜான்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *