January 18, 2022

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவின், பொது உறுப்பினர் கூட்டம், மாவட்ட பொருப்பாளர் திருத்தணி எம்.பூபதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, பங்கேற்பு…

1 min read
Spread the love

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவள்ளூர் அடுத்த திருப்பாசூர் டோல்கேட் அருகில் உள்ள ஏ.கே.என்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கே.திராவிடபக்தன் தலைமை வகித்தார். பூண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.கிறிஸ்டி வரவேற்புரை ஆற்றினார். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகிக்கித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.
கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைகளை விளக்கி பேசினார். இதில், நாளை (19-12-2020) சனிக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் மீட்போம் தேர்தல் சிறப்புக் கூட்டத்தில் திருத்தணி தொகுதியில் காணொளி காட்சி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் நிர்வாகிகள் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். திருவள்ளூர் திருத்தணியை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆக உருவாக்கி அதற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர்களை நியமித்த கழக தலைவர் அவர்களுக்கு இக்கூட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் திருத்தணி சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதாக நமது நோக்கம் ஆகவே நமக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு 10 ஆண்டு காலமாக நம்ம எதிர்க்கட்சியாக இருந்து கஷ்டப்பட்டது நினைவில் வைத்துக் கொண்டு 2021 நமது தலைவர் தளபதி அவர்கள் முதல்வர் ஆக்குவதே நமது ஒரே லட்சியமாக இருக்க கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த நிர்வாகத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும், என்று தெரிவித்தார் .

10 ஆண்டு காலமாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் ஒரு மாற்றத்தை தான் எதிர்பார்ப்பார்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் நாம் இன்று உள்ளோம் அதற்காக நம் சிறு முயற்சி எடுக்காமல் இருந்தால் அது நல்லதல்ல ஆகவே, அதிக கவனம் செலுத்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திகழவேண்டும் மற்றும் உள்ளாட்சி பொருத்தவரை அதிக இடங்களில் வெற்றி பெற்று நம் ஒன்றியக்குழு தலைவர் பதவியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இன்னும் சில மாதத்தில் திருவள்ளூர் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றிய தலைவர்களும் திராவிட முன்னேற்ற கழக பெருந்தலைவர்கள் தான் இருப்பார்கள் என்று தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழக தேர்தல் ஆணை வெளியிட உள்ளது தயவு செய்து கழக நிர்வாகிகள் அனைவரும் இதை கவனிக்கவும் 2021 முதல்வர் ஆகலாம் யூகித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த முறை கொரோன காலம் காட்டி 80 வயது முதியோர்களுக்கு தபால் வாக்கு கொடுத்துள்ளனர். நமக்கு வாக்காளர்பட்டியல் வந்தவுடன் முதலில் ஒவ்வொரு வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதி வாக்காளர் பட்டியலில் 80 வயது உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் இறந்து விட்டார்களா, உயிருடன் இருக்கிறார்களா என்று வரிசைப்படுத்த வேண்டும். பிறகு அந்த 80 வயது உடையவர்களை நேரில் சென்று அவர்களுடைய தபால் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் பதிவு வைக்க பெறு முயற்சி எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.

மேலும் இது முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் துணைவியார் அனுசுயா அவர்கள் மற்றும் கழகத்தின் சார்ந்த நிர்வாகிகள் மறைவிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் எஸ் சந்திரன், எஸ்.கே ஆதாம், மா.கோதண்டன், மா.இரகு சரஸ்வதி சந்திரசேகர் இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு. சிவசங்கரி ப.சிட்டிபாபு களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ஐ.சந்திரசேகர் மு.நாகன், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் சி.சு. ரவிச்சந்திரன், எஸ் மகாலிங்கம் ,கூளூர் எம்,ராஜேந்திரன்,மோ.ரமேஷ், அரிகிருஷ்ணன்ஜி.ரவீந்திரா,ஆர்த்தி ரவி,பெ.பழனி, சி.என் சண்முகம்,சி.ஜே.சீனிவாசன்,எம்.ஜே.ஜோதிகுமார்,டி.ஆர்.கே.பாபு, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் டி.கே.பாபுகமலநாதன், தி.ஆ. கமலக்கண்ணன், ஜே.சங்கர் கவிஞர் ஆ.இஸ்ரேல், சி.சு.விஜயகுமார், வி.சி. ஆர் குமரன், பிரியா பிரின்ஸ், டாக்டர் இரா.ராஜேந்திரன், எஸ்.ஆர் ரவி ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் மகாலட்சுமி மோதிலால்,சுஜாதா மகாலிங்கம்,சரஸ்வதி ரமேஷ், விஜயகுமாரி சரவணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் வி.வினோத் குமார் , டி.எம்.சுகுமார், எம்.எம்.லிங்கேஷ் குமார், கே.ஜி.ஆர்.ராஜேஷ் குமார், கு.பிரபாகரன், இ.குப்பன், எம்.மிதுன் சக்ரவர்த்தி, ம.புவனேஷ்குமார், மா.பாரதி, முரளி சேனா, கே.மஞ்சுளா குமார், எஸ்.காந்திமதி, டி.செல்வகுமார், என்.நந்தகோபால், ஆர்.டில்லிபாபு (எ) அசோக்குமார், ஆர்.கோபல், பொன்.பாண்டியன், எம்.சங்கர், பாலசுப்பிரமணியம், டாக்டர் முரளி, எஸ்.குமார், டி.சதீஷ் குமார், ஆர்.ராஜேந்திரகுமார், சி.ஜெயபாரதி, ம.பழனி, எம்.எஸ்.அருண்குமார், டி.ஜெய்கிருஷ்ணன், புட்லூர் குணா, மீன் ஆர்.குணசேகரன், எஸ் ஜெகஜீவன்ராம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சு லிங்கேஷ், பட்டரை சுபாஷினி பாஸ்கர், ரெஜினா மோசஸ், எஸ்.சுகபிரியா, ஆர்.கார்த்திகேயன், தயாளன், ஜி.ராஜேஷ்வரி, நந்தகுமார், ஜி.ஜெயபாரதி, த.தினகரன், பி.என்.உமாபதி, அம்மு, எஸ்.பரிமளா, ஆர்.திலகவதி, தி.நதியா, சிவக்குமார், நதியா நாகராஜ், சி.எஸ்.பாரதி, சி.முத்துரெட்டி, சுகுணா, பி.ஜி.நிலா, வள்ளியம்மாள், ஜோதி மற்றும் முன்னாள் இந்நாள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் முடிவில் நன்றியுரை ஐ.ஏ.மகிமைதாஸ், நெய்வேலி டி.மோதிலால் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

செய்தியாளர் – மகேஸ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *