January 25, 2021

கும்மிடிப்பூண்டியில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 200 மூத்த கட்சியினருக்கு பொற்கிழியை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டது…

1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காணொளி மூலம் திமுகவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும், செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கி.வே.ஜி.உமா மகேஷ்வரி, டாக்டர் பரிமளம், பகலவன், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், காணொளி மூலம் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தரஜன் மற்றும் நிர்வாகிகள் நலிந்த நிலையில் காணப்படும் மூத்த திமுகவினர் 200 பேருக்கு தலா 10ஆயிரம் பொற்கிழி, மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், காணொளி மூலம் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்றும், இதுவரை திமுக செய்த சாதனைகளை மக்கள் முன் எடுத்து கூறியும், அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு விளக்கி கூறியும், திமுகவிற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, கௌரிஹரிதாஸ், அமலா சரவணன், ஜோதி, ஜெயச்சந்திரன், திமுக ஊராட்சி தலைவர் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பாஸ்கரன், திருமலை, கி.வே.ஆனந்தகுமார், ரமேஷ், அறிவழகன்,பரத்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *