திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், உலக மாற்றுத்திறனாளர்கள் தினவிழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
1 min read
பல்நோக்கு சமூக சேவை சங்கம், மீஞ்சூர் ஒன்றிய அளவிலான மலரும் மாற்றுத்திறனாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய உலக மாற்றுத்திறனாளர்கள் தினவிழா பழவேற்காட்டில் நடைபெற்றது.
சென்னை சமூக சேவை சங்க நிர்வாகி ஹாஜாமொய்தீன் வரவேற்றார். இயக்குநர் பாட்ரிக் ஐ ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சாதனைகள் நடைபெற்றது. குறிப்பாக கரகாட்டம் ஆடிய மாற்றுதிறனாளர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் எம்.எஸ்.எஸ்.எஸ். திட்டம் சார்பில்
தகுதிக்கேற்ப நிதியுதவிளும், செயற்கை கால்கள்,காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி வேலாயுதம் நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777