மீஞ்சூரில் நடைபெற்ற, தமிழகம் மீட்போம் கூட்டத்தில் திமுக முன்னோடிகள் 180பேருக்கு, பொற்கிழி வழங்கப்பட்டது…
1 min read
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளுர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆலோசனையின் படி, மீஞ்சூரில், “தமிழகம் மீட்போம்” என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில், மீஞ்சூர் கலைஞர் அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரம்மாண்டமாக தலைமைச் செயலகம் போல் முகப்பு அமைக்கப்பட்ட அரங்கில் விழா நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றியத்தில் திமுகவின் கழக முன்னோடிகள் 180பேருக்கும், மீஞ்சூர் பேரூரில் 20 பேருக்கும் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும் நினைவு பரிசுகளுடன், பொன்னாடை போர்த்தி கவுரிக்கவும்பட்டனர். அவர்களுக்கு, ரூபாய் 10.000 அடங்கிய பொற்கிழியினை, இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்திய, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வழங்கினார்.

தொடர்ந்து இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதிமுக அரசின் அவலங்கள் குறித்தும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி திமுக ஆட்சி அமைக்கப்படும் எனவும் விரைவில் திமுக ஆட்சி அமையும் என மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நிழவழகன், மீ.வி.கோதண்டம்,சுரேஷ், பொது குழு உறுப்பினர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி, ஈஸ்வரிராஜா, மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங, பாளையம், இ.மணி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஸ்வா
நிழல்.இன் – 8939476777