பாமக 20% இட ஒதுக்கீடு கோரி போராடுவது தேர்தல் நாடகம், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் விமர்சனம்…
1 min read
மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கத்தில் புதிய வேளாண் சட்டங்களை விளக்க கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கலந்து கொண்டு வேளாண் சட்டங்கள் குறித்து, அங்கு கூடிய விவசாயிகளிடம் விளக்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல கணேசன், அரசி, கோதுமை ஆகியவை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அதனை விவசாயிகள் சுதந்திரமாக யாருக்கு வேண்டுமானால் விற்கலாம் எனவும், மேலும் ஏற்றுமதி செய்து பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார். மேலும் வகை வகையாய் உணவுகளை உட் கொண்டு டெல்லியில் சொகுசாக போராடி வரும் விவசாயிகளின் நிலையை பார்த்து வெளிநாடுகளில் இந்திய விவசாயிகளின் மதிப்பு உயர்ந்துள்ளது மட்டுமே நன்மை எனவும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாது என கூறினார்.

தேர்தல் காலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதி மற்றும் அவர்கள் கொடுக்கும் இலவசத்தை மட்டுமே பார்க்கும் மக்கள் தேர்தல் அறிக்கைகளை படிப்பதில்லை, என குற்றம் சாட்டினார். பாஜக அரசு பெரும்பான்பையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் கூறயவற்றை மட்டுமே தற்போது சட்டமாக இயற்றி வருகிறது எனவும் தெரிவித்தார். பொங்கலை ஒட்டி தேர்தலும் வரவுள்ள நிலையில் பொங்கல் பரிசு அறிவித்துள்ளது மக்களுக்கு தான் சேரவுள்ளது என்றும், ஆகவே கொடுப்பதை தடுக்க வேண்டாமே எனவும் இல கணேசன் கேட்டு கொண்டார்.

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு அண்ணாமலையிடமே விளக்கம் கேட்க வேண்டும் என கூறினார். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற கேள்விக்கு, இது குடும்ப அமைப்பை சிதறுண்டு போக செய்யும் முயற்சி என பதிலளித்தார். மேலும் 7தமிழர் விடுதலை விவகாரம் குறித்த கேள்விக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை என்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதால் விடுதலையில் தாமதம் ஏற்படுவதாக தான் கருதுவதாக கூறினார்.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் குறித்த கேள்விக்கு தேர்தல் காலம் என்பதால் போராட்டங்கள் நடந்து வருவதாக கூறினார். ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் பார்க்கலாம் என தெரிவித்தார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்த எல்.முருகன் தெரிவித்த கருத்து தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கட்சி என்பதால் அனைத்து முடிவுகளும் மத்தியில் இருந்து தான் அறிவிப்பு வரும் எனவும் தேர்தல் வியூகம் குறித்து மத்திய தலைமை அறிவிக்கும் என்றும் இல கணேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அரசு தொடர்புத்துறை தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துராஜ், சிதம்பரலிங்கம், செல்வி, ஒன்றிய தலைவர் சுந்தரம், தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் பாலாஜி, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் சரவணன், அனுப்பி இரவு பாலாஜி பத்மநாபன் சுப்பிரமணி ஒன்றிய அரசு தொடர்ந்து துறை எம்.எஸ்.வரதராஜ், கணபதி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்லாபுரம் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777