January 28, 2021

மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கும் வருமான உச்சவரம்பு ரூபாய் 8 லட்சமாக உயர்த்த தீர்மானம்…

1 min read

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுடைய வருமானஉச்சவரம்பு ரூ8 லட்சமாக உயர்த்தியது போல், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கும் நிர்ணயிக்க வேண்டுமென திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு அரசு எஸ்சி .எஸ் டி. அனைத்து பணியாளர்கள் நலச் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு எஸ் சி. எஸ் டி . அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டாக்டர் எம், பி ,முத்தாரப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர்கள். எம் சந்திரசேகர், டி ,காந்தி காமராஜ், எம், மனோகரன் , ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில பொருளாளர் சி ,சரவண காந்தி, அனைவரையும் வரவேற்று பேசினார்,

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் எஸ், இராமச்சந்திரன், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்து மதிப்பெண் பெற்ற எஸ் சி, எஸ் டி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார், மற்றும் சிறப்புரையாற்றினார். இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி, எஸ் ,எஸ் ,கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார், தமிழக அரசின் அனைத்து துறைகளில் அனைத்து நிலை பணிகளிலும் உள்ள காலி பணியிடங்களை எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டின்படி நிரப்பிட வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாற்றிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் பெற்றோர் வருமான உச்சவரம்பு தமிழக அரசு ரூபாய் 2 லட்சத்து 50,ஆயிரம் என நிர்ணயித்துள்ளது. இன்றைய விலைவாசி யிணை கருத்தில் கொண்டும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஓபிசி மாணவர்களுடைய பெற்றோர்களுடைய வருமான உச்சவரம்பை ரூ 8 லட்சமாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட ஆதிதிரவிடர் சமுதாய மக்களுக்கும் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து மாற்றி 8 லட்சமாக அறிவித்து, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பவன உட்பட 15 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் . ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம். எஸ். நைனா கண்ணு. மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,கே.பாலகிருஷ்ணன், டாக்டர்ஜே ,பொன்மனசசெல்வன், எம்,இளங்கோவன், வாசுகி, கே. பிரபு தாஸ், ஒய். மணிகண்டன்,எஸ். லட்சுமி, நரசிம்மன், வி. சுபசந்திரன். எஸ். சிவராமன், ஜி. முனுசாமி, பி. செல்வ சாமி, கே. பூபாலன், மாநில மகளிர் அணி செயலாளர். ஜி. ஜெயசுதா, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் எஸ் .சிவராமன், மாவட்ட பொருளாளர் குமாரவேல், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், துறைவாரி சங்க நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், இறுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் டி. காந்தி காமராஜ், எம். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எம் .நாராயண குமார் நன்றி உரையாற்றினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *