திருவண்ணாமலை நகரில், குட்கா கடத்திய 2 பேர், கஞ்சா விற்ற 6 பேர், சாராயம் விற்ற 3 பேர் என, மொத்தம் 11 பேர் அதிரடியாக கைது…
1 min read
திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் D.V.கிரன்ஸ்ருதி அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகர், உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் டெல்டா தனிப்படை போலீஸார் நடத்திய சிறப்பு திடீர் சோதனையில் திருவண்ணாமலை சிவன் பட தெருவில் உள்ள பூனம் ஸ்டோர் கடையில் 2 லட்சம் மதிப்புள்ள ஆன்ஸ் மற்றும் குட்காவை மறைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்த வேலு நகரை சேர்ந்த பாரஷராம்(32) முகல் தெருவை சேர்ந்த,
சித்திக்(38) என்பவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள ஆன்ஸ், குட்கா பொருட்கள் மற்றும் குட்காவை கடத்துவதற்கு பயன்படுத்திய ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுமார் 6 கிலோ 950 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த நளினி(30) சகுந்தலா, (72) கலைவாணி(52) அருண்குமார்(27) கௌதம்குமார் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகிசிவம்,(32) என்பவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. அவர்களிடமிருந்து 6 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சுமார் 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த வினோத்குமார்(34) திருவண்ணாமலை பே கோபுரம் 4 வது தெருவை சேர்ந்த வனிதா(42) திருவண்ணாமலை கல் நகரைச் சேர்ந்த தனலட்சுமி,(60) ஆகியோரை போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777