April 22, 2021

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திமுக சார்பில், “அதிமுகாவை புறக்கனிப்போம்” கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பாரதி தெருவில், நகர திமுக சார்பில் பேரூர் செயலாளர் முருகையன் தலைமையில், அதிமுகவை புறக்கணிக்கிறோம் எனும் தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜாங்கம் கலந்து கொண்டு அதிமுக அரசின் துரோகச் செயல்களை பொதுமக்களிடம் எடுத்து கூறினார். அதனை தொடர்ந்து “அதிமுகவை புறக்கணிக்கிறோம்” என்று, பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வேட்டவலம் செய்தியாளர் – திருமலை
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *