திருவள்ளுர் மாவட்டத்தில், மாற்று திறனாளிகளுக்கான உபகரனங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
1 min read
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அலிம்கோ நிறுவனம் வாயிலாக இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் பிரைவேட் லிமிடெட் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி, மற்றும் சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால் மற்றும் கை , காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான கல்வி உபகரணங்கள்
ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அதற்காக, பயனாளிகளை தேர்வு செய்ய, முகாம் கீழ்காணும் இடங்களில் நடைபெறவுள்ளது.

இம்முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவள்ளூர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து தேர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாம், 28.12.2020 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லியிலும், மாலை 2.00 மணி முதல் 5 மணி வரை புனித அந்தோனியார் நடு நிலைப்பள்ளி, ஆவடியிலும்,

29.12.2020 அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரியிலும், மாலை 2.00 மணி முதல் 5 மணி வரை கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டியிலும், 30.12.2020 அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணியிலும், மாலை 2.00 மணி முதல் 5 மணி வரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டையிலும், 31.12.2020 அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை டி.இ.எல்.சி. பெரியகுப்பம், திருவள்ளூரிலும், மாலை 2.00 மணி முதல் 5 மணி வரை அரசு மேல்நிலைப்பள்ளி, பெரிய பாளையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல்,பாஸ்போட் சைஸ் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் தவறாது கலந்து
கொண்டு பயன்பெறுமாறு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா அவர்கள் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777