திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு அறப் போராட்டம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் வன்னியர்கள் 20% இடஒதுக்கீடு கேட்டு அறப்போராட்டம் நடத்தினர். முன்னதாக,
ஆரணி பஜாரில் இருந்து பாமக கட்சியினர் பேரணியாக பேரூராட்சி அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டதிற்க்கு, பாமக நகரச் செயலாளர் அன்வர் பாஷா முன்னிலை வகித்தார். சோழவரம் ஒன்றிய செயலாளர் இளங்கோ மாநில துணை அமைப்பு செயலாளர் பி. ரவி மாநில மகளிரணி சுமலதா முன்னிலை வகித்தனர்.

பஜார் தெரு வழியாக ஊர்வலமாகச் சென்று பின்னர், ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கோஷங்கள் எழுப்பி, ஆரணி பேரூராட்சி முன்பாக அறப்போராட்டம் நடத்தினர். மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு பாஸ்கர் அவர்களிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திகேயன் மாவட்டத் தலைவர் பாபு மல்லியன் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன் செல்வி மற்றும் ஆரணி வழி நிற்கும் சுற்று வட்டார கிராமங்கள் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777