அதிமுக, பாஜக கூட்டணியை யாராலும் காப்பாற்ற முடியாது, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி…
1 min read
திருவண்ணாமலையில் தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருண்ணாமலை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே,பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், பிரகலநாதன், வாசுகி, ராமதாஸ், நகர செயலாளர் ரவி, தமுஎகச மாவட்ட செயலாளர் பாலாஜி, சிஐடியு மாவட்ட செயலாளர் காங்கேயன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் லூர்துமேரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அன்பரசன், தலைவர் பி.சுந்தர், விவசாயிகள் சங்க தலைவர் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருண்ணன் பேசியபோது, மதவெறியை எதிர்த்து போராடி வந்த பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக, பாஜக மதவெறியை பரப்பி வருகிறது. பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிட்டு, கலவரங்களை தூண்டி மக்களை துன்புறுத்துகிறது பாஜக அரசு, அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது என்றார். சில தினங்களுக்கு முன்னர், சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம், கேடயமாக இருப்போம் என எடப்பாடி பேசி வருகிறார். ஆனால், முத்தலாக் சட்டத்தை ஆதரத்துவிட்டு, சிறுபான்மை மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்து விட்டு, சிறுபான்மை இன மக்களை பாதுகாப்போம் என கூச்சமில்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் பேசி வருகின்றனர் என்று சாடிய அவர்,

சாதிய சக்திகள் இருக்கக் கூடாது என போராடினார் பெரியார். சாதிய சக்திகள் தற்போது வளர்ந்துள்ளது வேதனையளிக்கிறது. சாதிய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தினசரி தாக்குதல் கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. தீண்டாமைக் கொடுமைகள் ஒழிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் என்று தெரிவித்தார்.
எட்டு வழி சாலை திட்டம் குறித்து அவர் பேசியபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில், எட்டு வழி சாலை திட்டத்தை தமிழக அரசு தொடங்கினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக போராட்டம் நடத்தும் என்று கூறினார்.

புதிதாக ரஜினி, கமல் அரசியல் கட்சி துவங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, யார் வேண்டுமானாலும், புதிதாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியட்டாலும், அதிமுக, பாஜக கூட்டணியை பாதுகாக்க முடியாது. புதிய கட்சி தொடங்குபவர்களால், திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளதாகவும், அதன் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுப்பாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்காகவே, மோடிக்கு தமிழக ஆட்சியாளர்கள், காவடி தூக்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777