எல்லாபுரம் ஒன்றியத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…
1 min read
மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில், அதிமுக கழகத்தின் நிறுவன தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடமதுரை ஊராட்சி அரசு பள்ளி அருகே உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், எல்லாபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, சீனிவாசன், ஆகியோர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர் முன்னதாக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற மகேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் – சீனிவாசன் நிழல்.இன் – 8939476777