January 25, 2021

திருவண்ணாமலையில்,
மத்திய அரசின் வேளான் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

1 min read

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், புதிய மின்சார சீரமைப்பு சட்டம் 2020 ரத்து செய்ய வலியுறுத்தியும், திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தினை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

மேலும், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வதால் விவசாயிகள் எளிய முறையில் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் உள்ள சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பிஎஸ்என்எல் அலுவலகத்தை நோக்கி சென்று முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வேலுசாமி, விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பம்புசெட்டுகள் விவசாயிகள் இலவச மின்சாரம் பயன்படுத்தி வருவதாகவும், புதிய மின்சார சீரமைப்புச் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யும் சூழல் ஏற்படும்.

மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் எளிய முறையில் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டால் விவசாயிகள் எளிய முறையில் கடன் பெற்று விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே விவசாயிகளை பாதிக்கக்கூடிய இச்சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *