January 25, 2021

திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சியில் தி.மு.க.சார்பில், கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், வாயலூரில் உள்ள செங்கழுநீர் மேடு கிராமத்தில் தி.மு.க சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.எஸ். கோவிந்தராசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ஊரணம்பேடு, செங்கழுநீர் மேடு,வாயலூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெரிவித்தனர். அதே போன்று மெதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சி.எச்.சேகர், மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி குழு பெருந்தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அதேபோல் காட்டூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.எஸ். கோவிந்தராசன் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், ஒன்றிய குழு தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மற்றும் தமிழரசன், பாளையம் , உட்பட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *