பொன்னேரியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்வுகள்…
1 min read
மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பொன்னேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கிய பின் ஏழை, எளியோருக்கு காலை சிற்றுண்டியை அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் வழங்கினார்.

மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் மோகனவடிவேல், ஒன்றிய நகர கழக செயலாளர் உபயதுல்லா, திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், கழக நிர்வாகிகள் ஆறுமுகம், கோளூர் கோதண்டன், ஜெயம் ரமேஷ், பா.சங்கர், சலீம் நாகராஜ் தமிழ்செல்வன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் சிலைக்கு அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அப்போது அ.தி.மு.க கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

அதே போல், பெரிய அனுப்பம்பட்டு மற்றும் திடீர் நகர் போன்ற பகுதிகளில் எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கபட்டு அப்படத்திற்க்கு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777