திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில், கள்ளச்சாராயம், மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த பெண்கள் உட்பட 5 பேர் கைது…
1 min read
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன்ஸ்ருதி அவர்கள் தலைமையில், செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மலர் அவர்கள், மற்றும் டெல்டா தனிப்படை போலீசார் நடத்திய மதுவிலக்கு சோதனையில் செங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காயப்பட்டு, வலையாம்பட்டு, தீர்த்தாண்டப்பட்டு, சென்னசமுத்திரம் போன்ற பகுதிகளில் 1000 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வீடுகளின் உள்ளே மறைத்து வைத்திருந்த காயப்பட்டு கிராமம், செங்கம் தாலுக்காவை சேர்ந்த சரோஜா, (66) என்பவரை, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவரிடமிருந்து1000 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைப்பற்றி கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும், 180 மில்லி கொள்ளளவு கொண்ட 108 மது பாட்டில்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த தீர்த்தாண்டப்பட்டு கிராமம், செங்கம் தாலுக்காவை சேர்ந்த கதிர்வேல், (55) என்பவரும், வலையாம்பட்டு கிராமம், செங்கம் தாலுக்காவை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் (22) சென்னசமுத்திரம் கிராமம், செங்கம் தாலுக்காவை ராஜேஸ்வரி (65) என்பவரும்,

தீர்த்தாண்டப்பட்டு கிராமம், செங்கம் தாலுக்காவை சேர்ந்த, சென்னம்மாள் (40) என்பவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இவர்களிடமிருந்து, 180மில்லி கொள்ளவு கொண்ட 108 மதுபாட்டில்களை கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777
