April 22, 2021

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களின்றி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவதுண்டு.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவ பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காலை, 5 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை வந்தடைந்தார்.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதால், கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தாண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி சொர்க்கவாசலம் திறப்பு நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது.

பூஜைகள் முடிந்த பின்னர் காலை 06.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர் என்பதால் பக்தர்கள் கோயில் வாசலில் காத்துக் கிடந்தனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *