பழவேற்காடு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில், போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு நோயாளிகளுக்கு, தேசிய மக்களாட்சி பேரவை, தேசிய இலஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு, தேசிய மக்களாட்சி புலனாய்வு மாத இதழ் சார்பில், போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய மக்களாட்சி பேரவை மாநிலத் தலைவர் பொன்.யூ.கலைச்செல்வன் அதனை வழங்க பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் பெற்றுக கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் கட்டாயம் அணியவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சட்ட ஆலோசகர்கள் காந்தி, அகிலன், முன்னாள் கவுன்சிலர் பழனி, மாவட்ட செயலாளர் பழவை சாகுல்அமீது, பாஸ்கர், சலீமுதீன், அரசு காஜி முஹம்மதுஅலி, ஹாஸ்மிஸ்பா, நித்தியானந்தம், சர்தார், முஹம்மதுபர்கத் உள்ளிட்டோர் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777