ஏழை எளிய மக்களுடன், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய சமூக சேவகி சந்தோஷ் மேரி…
1 min read
அன்னை அறக்கட்டளை மூலம் கடந்து 20 வருடங்களாக ஏழை எளியோர், ஆதரவற்றோருக்கு அன்னை அறக்கட்டளை நிறுவனர் சந்தோஷ் மேரி உதவி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஜான் எமர்சன், காப்பாளர் சந்திர மனோகர் ஆகியோருடன் சேர்ந்து அன்னை அறக்கட்டளை வாயிலாக பயிலும் மாணவர்களுக்கும், கண்ணன்கோட்டை, குருவராஜா கண்டிகை, தாத்தையன் கண்டிகை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலிவடைந்த பழங்குடியின ஏழை எளிய மாணவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.

நிகழ்வை ஒட்டி அனைருக்கும் அறுசுவை உணவு அளித்தோடு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.மேலும் பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார். கிறிஸ்துமஸ் திருநாளின் அடிப்படையே எளியோர் மீது இறக்கம் காட்டுவதே. அதன் அடிப்படையில் ஏழை எளியோர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியதன் மூலம் அந்த குழந்தைகள் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பதோடு, இந்த செயல் இயேசு ஆண்டவரை மகிழ்ச்சிப்படுத்தும் என்பது தனக்கு மனநிறைவை அளிக்கிறது, என்று அன்னை அறக்கட்டளை நிறுவனர் சந்தோஷ் மேரி தெரிவித்தார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777