திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், செம்பேடு ஊராட்சியில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது…
1 min read
நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார் அப்போது அப்பகுதி பெண்கள் தாங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் அதிக கட்டணம் செலுத்தி சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சென்று வந்து தான் எங்களோடு தேவைகளை பூர்த்தி செய்கின்றோம் , மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வசதி மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலையில் செய்த பண்ணிட்டு இன்னும் சம்பளம் வரவில்லை, என்றும் மேலும் 100 நாள் பணி வழங்க வேண்டும் என்ற அப்பகுதி பெண்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

இதற்கு பதிலளித்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் இப்பகுதி மக்கள் கேட்டிருந்த அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுகவை வரவேற்கிறோம் என்று மக்கள் கிராமசபை கூட்டத்தில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வி.ஜே சீனிவாசன், அன்பு, டீ.பாஸ்கர், ஜி.பாஸ்கர், நாகலிங்கம்,
இளைஞர் அணி அமைப்பாளர் கோடுவள்ளி குமார்,உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777