கும்மிடிப்பூண்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் 56ம் பிறந்தநாள் விழா…
1 min read
வடக்கு மாவட்ட தமாகா சார்பில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நடைபெற்ற தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழாவிற்கு, மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார தலைவர் என்.ஆர்.கே.தாஸ், கிழக்கு வட்டார தலைவர் ஆர்.அசோகன் முன்னிலை வகித்தனர். தமாகா மாற்றுத் திறனாளி பிரிவு மாவட்ட தலைவர் ஏ.ஐ.ரஹமத்துல்லா வரவேற்றார்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக தமாகா மாநில பொது செயலாளர் பி.திருவேங்கடம், மாவட்ட செயலாளர் பி.எஸ்.பழனி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஆத்தூர் தாஸ், வடக்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.நாகமணி, ஆர்.லோகநாதன், சுகுமார் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமையில் தமாகாவினர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை ஒட்டி எளாவூர்தொம்பரை ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 56 மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சக்கர சைக்கிள், கையால் தள்ளும் வண்டி, ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில், 250 ஏழை எளிய பெண்களுக்கு புடவை வழங்கினர். பின்னர் ஆதரவற்றோர் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில், எல்லாபுரம் ஒன்றிய கிழக்கு வட்டார தலைவர் எம்.மாசிலாமணி, மேற்குவட்டார தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் டி.எம்.செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகு, பி.காமராஜ், புருஷோத்தமன், முகமதுசலீம், தங்கம் பங்கேற்றனர். முடிவில் இ.சிவகுமார் நன்றி கூறினார்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் 56ஆம் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் டி.எம்.செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கே.கணபதி, ஏ.கரிமுல்லா, கே.சுரேஷ் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலைய வளாகத்தை ஒட்டி தமாகா கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஜி.கே.வாசன் பெயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை ஒட்டி 56 ஏழை எளிய பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. விழாவில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட துணை தலைவர் நாகமணி, கிழக்கு வட்டார தலைவர் அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777