சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிட வேண்டும், என கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…
1 min read
எட்டு வழிசாலையின் அரசாணையை பிறப்பிக்க கூடாது, என எட்டு வழி சாலை இயக்க கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு வழி சாலை திட்டத்தில் நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கம் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வருகின்ற பிப்ரவரி மாதம் சட்டமன்றம் கூடும்போது மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும், என்று வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தும் நிலை உருவாகும்.

அந்த சூழ்நிலைக்கு எங்களைத்தல்லாமல் தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை கைவிடுவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி சட்டத்துக்கு விரோதமாகவும் விவசாயிகளை அச்சுறுத்தி அமைக்கப்படு வருவதாகவும்,
இதனை வன்மையாக கண்டிப்பதாகவும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர் மின் கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியினை செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்கின்ற உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் விவசாயிகளையோ விவசாயிகளுடைய விளைநிலங்களை அச்சுறுத்தியோ மிரட்டியோ விவசாய விளை நிலங்களை பறிக்கக்கூடாது. மீறி தங்களுடைய நிலத்திற்குள் வந்தால் தங்களின் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என்று முழக்கமிட்டனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777