April 21, 2021

திருவள்ளுர் மாவட்டத்தில்,கொரோனா காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஆய்வக பணியாளர்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்காத கொடுமை, மாவட்ட ஆட்சியரிடம் மனு…

1 min read

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக மக்கள், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த சமயங்களில், வீடு வீடாக சென்று மக்களின் உயிரை காப்பாற்ற, ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா லேப் டெக்னீசியன்கள் கடந்த 9-மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3-மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை, அப்படி இருந்தும் அவர்கள் இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக, திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், அப் பணியாளர்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், பொது மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் நேரம் காலம் பார்க்காமல், விடுமுறை நாட்களில் கூட பணியாற்றி வரும் லேப் டெக்னீசியன்களுக்கு, ஊதியம் வழங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பல அமைப்புகள் போராட முன் வந்த நிலையில் அவைகளை தவிர்த்து விட்டு, இது குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அடுத்த ஒரு வாரத்தில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *