பெரியபாளையம் அருகே, ரியல் எஸ்டேட் அதிபரை, காரை மடக்கி தாக்க முயற்சி…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் வயது (46) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கண்ணன் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்திற்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக செங்குன்றத்தில் இருந்து பெரியபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த கார், கண்ணிகைபேர் ஏரிக்கரை வளைவு பகுதியில் வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென கண்ணன் வந்த காரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த வீச்சருவாள் கொண்டு கண்ணன் கார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன், விக்னேஷ், டிரைவர் மணி, ஆகியோர் அச்சமடைந்து உயிர் காப்பாற்றிக்கொள்ள காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளனர்.

ஆனால், இவர்களை விடாமல் மர்ம நபர்கள் நீண்ட தூரம் விரட்டி சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 50 பேர் கொண்ட தொழிலாளர்களிடம் மூவரும் தஞ்சமடைந்தனர். தொழிலாளர்கள் மர்ம கும்பலை நோக்கி சென்ற போது, அந்த கும்பல் செய்வதறியாது திகைத்து நின்று தாக்குத செய்யும் திட்டத்தை கைவிட்டு பயந்து மோட்டார் சைக்கிளில் ஏரி தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்ணனை தாக்க வந்தவர்கள் நோக்கம், முன்விரோதம் காரணமா அல்லது தொழில் ரீதியான வேறு ஏதாவது பிரச்சனையா, என்ற கோணத்தில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழ்ல்.இன் – 8939476777