January 26, 2022

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கதின் மாநில தலைவர் சுபாஷ் அவர்களுக்கு, “வாழும் பாரதி” விருது வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

உலக தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் “சொல்லின் செல்வர்” ஆவடி குமார் அவர்களின் தலைமையில், எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில், “வாழும் பாரதி” விருது பெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பல்வேறு எழுத்தாளர்கள் கவிஞர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டும், மாணவர்களுக்கு, இளம் பாரதி விருதுகளையும் வழங்கினார்.

காலை முதல் மாலை வரை நான்கு அமர்வுகளை கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் பாரதி பாவலர் விருதுகள், இளைய பாரதி விருதுகள், மற்றும் வாழும் பாரதி விருதுகள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் வழங்குவதாக இருந்தது.

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சருடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சார்பில் அந்த விருதுகளை ஆவடி குமார் மற்றும் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் முன்னாள் உலகத் தமிழ் சங்க இயக்குனர் முனைவர் கா.மு.சேகர் ஆகியோருடன் இணைந்து அனைவருக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்
சிறப்புரை ஆற்றினார். பாரதி பற்றிய அவருடைய பேச்சைக் கேட்டு அங்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் வியந்து பாராட்டினார்கள்.
முன்னதாக பாரதி வேடம் அணிந்து வந்த மாணவர்களின் ஊர்வலத்தை பாரதி இல்லத்தில் இருந்து துவக்கி வைத்தார் சுபாஷ் !

எட்டயபுரத்தில் உள்ள பாரதி மண்டபத்தில் “வாழும் பாரதி” விருது வழங்கப்பட்டது. ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டு பலர் பேசினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமண், தேசிய குழு உறுப்பினர் கி.மா.சங்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் “சக்தி” முருகன், விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர் M.சடையப்பன், டெல்டா மண்டலச் செயலாளர் A.எழில், மற்றும் நிர்வாகிகள் மூத்த பத்திரிகையாளர் சன் டிவி ராமகிருஷ்ணன், தீக்கதிர் முத்துக்கோரி, ராதாகிருஷ்ண ராஜா, மூத்த பத்திரிகையாளர் குமாரவேல், விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளை கவிச்சுடர் அரிமா சிந்தைவாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed