April 22, 2021

திருவண்ணாமலையில், மாணிக்கவாசகர் ஒன்பதாம் நாள் உற்சவம்…

1 min read

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாணிக்க வாசகர் உற்சவம் ஒன்பதாம் நாள் ஸ்ரீ நடராஜர் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்..

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், 30.12.2020 புதன்கிழமை, ஆருத்ரா தரிசனம். திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளிய அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு இன்று 30.12.2020 அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.05 நடராஜர் புறப்பாடு, திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி பவனி நடைபெரும்.

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில், கொரோனா தொற்று பரவல் காரணத்தால், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்க்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *