திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், தாமரைபாக்கம் ஊராட்சியில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது…
1 min read
மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், தாமரைபாக்கம் ஊராட்சியில், அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைபில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஒன்றிய பொறுப்பாளர் கோடுவெளி தங்கம் முரளி ஏற்பாடு செய்து இருந்தார்.

இந் நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி பெண்கள் தாங்கள் பகுதிக்கு
வீட்டு மனைபட்டா படித்து முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் என்றும் மேலும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அருகே வாழும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இடம் மனுக்களை அளித்தனர்.

மேலும்
மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலையில் செய்த சம்பளம் இன்னும் வரவில்லை என்றும், மேலும் 100 நாள் பணியை 200 நாட்களாக உயர்த்தி தரவேண்டும், அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், இப்பகுதி மக்கள் கேட்டிருந்த அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றப்படும், எனவும்,

படித்த இளைஞர்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது வீட்டு மனை பட்டா மற்றும் படித்த இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை உருவாக்கி தந்தது திமுக ஆட்சிதான் என்று பெருமிதம் தெரிவித்தார். அப்போது இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுகவை வரவேற்கிறோம் என்று மக்கள் கிராமசபை கூட்டத்தில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பி அதிமுக நிராகரிக்கிறோம் என்று கையை கையெழுத்து இட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வி.ஜே சீனிவாசன், அன்பு, டீ.பாஸ்கர், ஜி.பாஸ்கர், நாகலிங்கம், சுப்ரமணி, லோகநாதன், ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி அமைப்பாளர் எம்.குமார், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சம்பத்,, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த முருகன், பிரபு. மற்றும் நிர்வாகிகள் கணேசன், துரைக்கண்ணு, ஆனந்தன், தாஸ், சதீஷ், தீனதயாளன் அசோக்குமார்,வெங்கடேசன், மதிவாணன், மாதவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777