January 18, 2022

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக, மீஞ்சூர் நூறடி சாலையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர், மாவட்டச் செயலாளர் குபேந்திரன் தலைமையில், ஊர்வலமாக சென்று மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆணையர் வேதநாயகத்திடம் , வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது துலுக்காணம், மாசிலாமணி, ராசப்பன், அரசு, வெங்கடேசன் சீனிவாசன், பாபு, விஷ்வா, உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா, புகைபடம் – மில்டன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *