கலசபாக்கம், மிருகண்டா அணையை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்து வைத்தார்…
1 min read
சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள, மிருகண்டா அணையில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையால், அணையின் நீர் மட்டம் கனிசமாக நிரம்பி வருகிறது. அதனால் விவசாயிகள் பாசன வசதி பெறவேண்டி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.

அதற்க்கான, அணையின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,
மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், அணையை திறந்து வைத்தார். மேலும் இந் நிகழ்ச்சியில், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான, தூசி K.மோகன் அவர்கள் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு பாசனத்திற்கு அணையினை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777