பொன்னேரியில், அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை, பலராமன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…
1 min read
பொன்னேரி எம்.எல்.ஏ சிறுனியம் பலராமன் அவர்களிடம், பொன்னேரி பகுதி விவசாயிகள் சார்பில், பொன்னேரியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க, கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியதின் மூலம், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் 19 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பொன்னேரி அருகே உள்ள, பழைய வேண்பாக்கம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.

பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி, நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.இந்நிகழச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காஜா சாகுல்அமீது முன்னிலை வகித்தார். இவ்விழாவில், அதிமுக நிர்வாகிகள், பானுபிரசாத், மோகனவடிவேலு, தமிழ்ச்செல்வன், பொன்னுதுரை, உபயத்துல்லா, ராமலிங்கம், சம்பத் ஆகியோரும், பா.ஜ.க.வின் நிர்வாகிகள் பாஸ்கரன், ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் மற்றும பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777