April 22, 2021

அறந்தாங்கியில், மக்கள் சமூக இடைவேளியுடன் நின்று, பொங்கல் சிறப்பு தொகையையும், பொங்கல் பரிசுகளையும் பெற்றுச் சென்றனர்…….

1 min read

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் சிறப்பு பரிசினையும் தொகையையும் பெற்றுச் செல்கின்றனர்.

அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள தியாகி சீனிவசன் தெருவில் உள்ள ரேஷன் கடையில்19, 26, 27 வது வார்டுகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு காலை முதலே அரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, கரும்பு அடங்கிய பைகளையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு தொகை ரூபாய் 2500 ஆகியவற்றையும், வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அமைதியாக பொதுமக்கள் சமூக இடைவேளியுடன், நீண்ட வரிசையில் அமைதியாக நின்று பொருட்களை பெற்றுச் சென்றனர். இந்த சிறப்பு பொருட்களையும், சிறப்பு தொகையினையும் பெற்று கொண்ட பொது மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகள் – ஆனந்தன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *