அறந்தாங்கி அருகே, நாகுடி ஊராட்சியில், மழையால் சேதமடைந்த இடங்களை சுத்தப்படுத்தி சீர்செய்த தி.மு.க வினர்…
1 min read
நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட, நாகுடி வங்கியின் முன்புக நெடுநாட்களாக மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சேறும், சகதியாக இருந்தது. இதனை, சீரமைக்க கோரி ஊராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை.

அதனால், இது குறித்து தகவலறிந்த, தி.மு.க ஒன்றிய செயலாளர் பொன் .கணேசன் மற்றும் தி.மு.க.ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி ஆகியோர் தங்களது சொந்த செலவில் சேதமடைந்து, மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்த அந்த இடத்தை சுத்தப்படுத்தி சரி செய்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், நாகுடி கடைவீதி பகுதியில், மழை நீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் வசதி செய்து தரவேண்டும் என கூறினர்.
செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777
