கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் ஊராட்சியில், 1,732 குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை, சிவக்குமார் வழங்கினார்…
1 min read
நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, அதிமுக மீனவர் அணி மாநில துணை செயலாளர் ஜெ.சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர், அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், நிஜாம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் பங்கேற்று ஆரம்பாக்கத்தில் உள்ள 3 ரேஷன் கடைகளை பயன்படுத்தும் 1732 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசான 2,500 ரூபாய், சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டை கிராமத்தில் முதலாவதாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரால் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்விற்கு ஈகுவார்பாளையம் ஊராட்சி துணை தலைவர் சௌந்தரி மகேஷ், வார்டு உறுப்பினர் முத்துகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், அதிமுக நிர்வாகி நேதாஜி, விற்பனையாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், 746 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசான 2500ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி ஒன்றியகுழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தமிழக அரசு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டதில்லை, அதனால் மக்கள் அதிமுக அரசிற்கு எப்போதும் ஆதரவாய் இருக்க வேண்டும் என்றார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 17 ரேஷன் கடைகளில் 9,201 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

பெரியஓபுளாபுரம் தொம்பரை ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் துவங்கிய இந்த நிகழ்விற்கு கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், எளாவூர் ஊராட்சி தலைவர் வள்ளி முருகேசன், கூட்டுறவு சங்க துணை தலைவர் ஓ.இ.சரவணன், செயலாளர் சந்திரசேகர், இயக்குனர்கள் சக்கரை, எம்.ஜி.எம்.ரவி, பரிமளம், குருமூர்த்தி, சீனு, நடராஜன், ஏழுமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் பங்கேற்று பயனாளிகளுக்கு 2,500 ரூபாய் உள்ளிட்ட தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்கினர்.

செய்திகள் – சுடர்மதி நிழல்.இன் – 8939476777