திருவண்ணாமலையில், 5.466 மாணவ மாணவிகள், குரூப் 1 தேர்வு எழுதினர், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…
1 min read
திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் 5,466 பேர் தேர்வு எழுதுகின்றனர், அதில் 17 மாற்றுத்திறனாளிகள், தேர்வு மையங்கள் மொத்தம் 7 இடங்கள், அதில் 5 கல்லூரியும், 2 அரசு பள்ளிகளியும் அடங்கும், தேர்வு நடைபெற்று வருகிறது. சரியாக காலை பத்து மணியளவில் குரூப் 1 தேர்வு துவங்கியது, மதியம் ஒரு மணி அளவில் இந்த தேர்வுகள் முடிவடையும்.

கொரோனா காரணமாக, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,
என் தலைமையில் குரூப் 1 தேர்வு நடத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, அந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பான முறையில் குரூப்-1 தேர்வு நடத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு மணிக்கு தேர்வு முடிவடைந்ததும் தேர்வுத் தாள்களை சேகரித்து அனுப்பும் வேலைகள் நடைபெறும், இதுவரை எந்த பிரச்சினையும் தேர்வில் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777