திருவண்ணாமலை, விஸ்வ பிராமின சத்திரத்தை கைப்பற்றுவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், சாலை மறியல்…
1 min read
திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ளது விஸ்வ பிராமண சத்திரம். இந்த சத்திரத்தை ஏற்கனவே தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் ரூபாய் 17 லட்சம் ஊழல் செய்து விட்டு பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளனர், என்று மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருவண்ணாமலை ஏ.எஸ்.பி கிரண் சுருதி பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட கோரினார். சிறிது நேரத்திற்குப் பின்னர் பூட்டு போட்டு விட்டு சென்ற மற்றொரு தரப்பினரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு சாவியை கொண்டுவந்து சத்திரத்தை திறந்தனர்.

இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சத்திரத்தின் உள்ளே சென்றனர்.
விசுவ பிராமண சத்திரத்தை கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777