திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் சார்பில், பழவேற்காட்டில் ஆலோசனை கூட்டம்…
1 min read
திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் சார்பில், பழவேற்காட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க பொதுச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் சங்கத் தலைவர் எத்திராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்தும் பழவேற்காட்டின் வளர்ச்சிக்கு சங்கம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் துரைராஜ், ஜானகிராமன், மனோகரன், சுசீலன், சண்முகம், எஸ்தாக்கி, சுப்பிரமணி, முருகன், ஜமிலாபாத் சேக்தாவூத், ஜனகராஜ், முகன், லோகேஷ், ராஜலட்சுமி செல்வாம்பிகை உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777