திருவண்ணாமலையில், யாதவர்களுக்கு 16 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மாநாடு…
1 min read
கோகுல மக்கள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நடைபெற்றது. மாநாட்டில் சேகர் யாதவ், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.யாதவ மக்கள் விவசாயம் மற்றும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக யாதவர்கள் உள்ளனர். யாதவ சமுதாய மாணவ, மாணவிகள் கல்வி வேலைவாய்ப்பு பெற அரசு யாதவர்களுக்கு 16 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திராவிட கட்சிகள் யாதவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்த 60 ஆண்டுகாள திராவிட ஆட்சியில் தேர்தலில் போட்டியிட யாதவர்களுக்கு ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய சமூகமாக யாதவர் சமூகம் இருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரத்தை திராவிட கட்சிகள் வழங்கவேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒரு தொகுதியையாவது யாதவர்களுக்கு ஒதுக்க வேண்டும். உழைக்கும் மக்களாகிய யாதவர்களுக்கு 16 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாலை திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோகுல மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். யாதவர்களுக்கு 16 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோகுல மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட மாநாடு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோகுல மக்கள் கட்சியின் மாநில தலைவர் சேகர் தெரிவிக்கையில், யாதவர் இன மக்களுக்கு 16 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது எங்களை எம்.பி.சி வகுப்பில் சேர்க்க வேண்டும், அரசியலில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.கடந்த 31 ஆண்டு காலமாக திமுக யாதவ இனத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் வஞ்சித்து விட்டது.இதனால் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்பதவிகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மருத்துவர்கள் என்ற பதவிகளில் வரமுடியாமல் வஞ்சித்து விட்டது. மூன்றாவது அணி அமைத்து எங்களை மதித்து அழைக்கும் பட்சத்தில் நாங்கள் மூன்றாவது அணியில் சேர தயாராக உள்ளோம். எனவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777