April 22, 2021

திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய, வெங்கல் ஊராட்சியில், மக்கள் கிராம சபை கூட்டம்…

1 min read

திருவள்ளுர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய, வெங்கல் ஊராட்சியில், அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபை கூட்டம், ஒன்றிய கழக பொறுப்பாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசுவாமி கழகப் பேச்சாளர் செங்கை தாமஸ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் பொதுமக்களின் குறைகளை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் 100 நாள் வேலையில் செய்த வேலைக்கு இன்னும் கூலி வழங்கவில்லை, அதேபோல் கொரோனா வைரஸ் காலத்தில் மின்சார கட்டணம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும், என்பவன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

.

பின்னர் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகை மீது பொதுமக்கள் கையெழுத்து இட்டனர். பின்னர் இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி 2020ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து திமுகவை வெற்றிபெறச் செய்தால், இப்பகுதி நீங்கள் கேட்டிருந்த, அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று நிறைவேற்றித் தரப்படும், என்று உறுதி அளித்தார்.

இதில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜே.சீனிவாசன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், கே.ஜி.அன்பு, இ.சுப்ரமணி, வி.நாகலிங்கம்,
ஆர்.லோகநாதன், உமாசீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எம்.குமார், மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த பி.ஸ்ரீதர், எஸ்.ரகு, எம்.கஜா, கிராணசுந்தரம்,

சேகர், பாகல்மேடு நாராயணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வேலு, கலாநிதி, சத்தியா, கோபிநாத், லோகேஷ், வேலா, உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் மாற்று கட்சியிலிருந்து தர்மா சேட், ரமேஷ் சேட், ஸ்வீட் கணபதி, பிரஸ் மணி, பானு, சீனிவாசன் உள்ளிட்ட 6 பேர் ஒன்றிய கழக பொறுப்பாளர் தங்கம் முரளி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *