January 28, 2021

புதுகோட்டை மாவட்டம், ஆவிடையார் கோயில், மீமிசல் பகுதியில், 4 கிலோ கஞ்சா பறிமுதல்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில், மீமிசல் காவல் துறையினர், மீமிசல் பேருந்து நிலையத்தில் இன்று வழக்கம் போல், தணிக்கை செய்து கொண்டு இருந்த போது, மீமிசல் அருகே உள்ள ஜெகதாப்பட்டினம் கிராமத்தில் வசித்து வரும் கணேசன் என்பவரது மகன் பாண்டி (23) என்பவர், மதுரையில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ஒரு பேக்கில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.

உடனே, மீமிசல் உதவி ஆய்வாளர் அமுது சுந்தரராஜன், தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், காவலர் செய்யது முகமது ஆகியோர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை மீமிசல் காவல் நிலையம் அழைத்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *