புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்…
1 min read
மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில், தமிழக முதல்வர் அறித்த, அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை, தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி, சுகாதார துறையின் மூலம் தீவிரமாக கண்காணிபட்டு வருகிறது. அதில், வெளினாடுகளில் இருந்து வந்த 44 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.

அந்த நபர்களுடைய ரத்த மாதிரிகளில், உருமாறிய கொரோனா என கூறப்படும், புதிய வகை கொரோனா உள்ளதா என கண்டறிய வேண்டி, புனேவில் உள்ள தேசிய பரிசோதனை மைய்யத்தில் பரிசோதித்ததில் ஏற்கனவே, ஒருவருக்கு உருமாறிய கொரோனா நோய் தொற்று பதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பதிக்கப்பட்டது தெரிய வந்தது. இப்போது தமிழக அளவில், 4 பேர் பாதிக்கபட்டு உள்ளதால், மக்கள் தயவு செய்து முன் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். ஆகவே, மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட எதிர் நோக்கியுள்ள இந்த நேரத்தில், இது போன்ற கொடிய நோய் தொற்றில் இருந்தும் தற்காத்து கொள்வதும் அவசியம்.

மேலும், தற்போது கேரளாவில் பரவை காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், தமிழக சுகாதார துறை மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோழிகள் விற்பனைக்கு தமிழகம் வருவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேனி மாவட்டம் உட்பட கேரளாவின் எல்லையோரங்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறினார்.

மணல்மேல்குடி ஒன்றியம், நிலையூரில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில், கர்பணி தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பெட்டகத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது அறந்தாங்கியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சருடன், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி, ஆர்.டி.ஓ ஆனந்த்மோகன், ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செய்திகள் – ஆனந்தன்
நிழல்.இன் – 8939476777