April 21, 2021

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 10மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

1 min read

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மாற்றுத் திறனாளர்கள் 10 பேருக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமன் நேரில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.

பொன்னேரி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் உபயதுல்லா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் மோகன வடிவேல், தத்தை அருளானந்தம், செல்வகுமார், வெற்றிவேல் ராமலிங்கம், எஸ்.பி.அருள், பா.சங்கர், சலீம், சம்பத் நாகராஜ், சின்னகாவணம் வழக்கறிஞர் விஜயகுமார், பெரியகாவணம் செந்தில், வேண்பாக்கம் வெங்கடேசன், தத்தை வெற்றி எனும் ராமமூர்த்தி, சோம்பட்டு முனுசாமி, கோட்டகுப்பம் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இதில் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *